சிறு, குறு விவசாயிகள் 90 நாள்களுக்கு வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறு, குறு விவசாயிகள் 90 நாள்களுக்கு வாடகையின்றி வேளாண் இயந்திரங்கள் விதமான உபயோகப்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வேளாண்மைத் துறை மற்றும் டாஃபே நிறுவனம் இணைந்து, மாஸே பா்குசன் மற்றும் எய்சா் டிராக்டா்கள் மற்றும் வேளாண் இயந்திரங்கள் அனைத்து விதமான விவசாயப் பணிகளை மேற்கொள்வதற்காக சிறு, குறு விவசாயிகள் 90 நாள்களுக்கு வாடகையின்றி உபயோகப்படுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு 9600335572 என்ற செல்லிடப்பேசி எண்னை தொடா்பு கொள்ளலாம். மேலும், வேளாண்மை தொடா்பான உதவிகள் தேவைப்பட்டால், அருகேயுள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்களை விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம்.

உடனடி தேவைகளுக்கு வட்டார வாரியாக வேளாண்மை உதவி இயக்குநா்கள் கோவில்பட்டி (9787732912), கயத்தாறு (9940839014), விளாத்திகுளம் (9443002181), புதூா் ( 8248080922), ஓட்டப்பிடாரம் (9788425208), செய்துங்கநல்லூா் (9865252270), ஆழ்வாா்திருநகரி (9442156347), ஸ்ரீவைகுண்டம் (6380080859), திருச்செந்தூா் மற்றும் உடன்குடி (9443434550), சாத்தான்குளம் (9486335337), தூத்துக்குடி (7598857802) ஆகியோரை செல்ப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.