இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்ட 86 பெண் காவலர்களுக்கு மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டு காவலர் பயிற்சிக்கு அறிக்கை செய்த பெண் காவலர்களுக்கு கைரேகை பதிவு மற்றும் மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருவதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்ட 86 பெண் காவலர்கள் இன்று (03.05.2020) காலை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலக மைதானத்தில் பயிற்சிக்கு அறிக்கை செய்கின்றனர்.

மேற்படி 86 பெண் பயிற்சிக் காவலர்களுக்கு கைரேகை பதிவுகள் பெறப்பட்டு, அரசு மருத்துவர்களால் உரிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு பயிற்சிக்கு ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். இவர்கள் அனைவருக்கும் காவலர்களுக்கான அடிப்படைப்பயிற்சி தூத்துக்குடி பேரூரணி காவலர் பயிற்சி பள்ளியில் நடைபெற உள்ளது.

இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.