7ம் ஆண்டு பட்டமளிப்பு விழா : தூத்துக்குடி காமராஜ் கல்லூரி

தூத்துக்குடி காமராஜ் கல்லூரி (சுயநிதி பாடப்பிரிவு) 7ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று (13.3.20) வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு கல்லூரியின் செயலாளர் திரு.A.ராஜேந்திரன் மற்றும் முதல்வர் முனைவர் திரு.D. நாகராஜன் அவர்கள் முன்னிலையில் காமராஜ் கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் S. சந்தோஷ் பாபு அவர்கள் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டமளித்து சிறப்புரை ஆற்றினார். விழாவில் பல்வேறு பிரிவுகளில் இளநிலை மற்றும் முதுநிலை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற 269 மாணவ மாணவிகளுக்கு சட்டங்கள் வழங்கப்பட்டது. விழாவின் ஏற்பாடுகளை கல்லூரி இயக்குனர் முனைவர் A.M.T. டோனி மெல்வின் அவர்கள், அலுவலர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.