எரிக்கல்

750 கோடி ஆண்டு பழமையான பொருள் கண்டுபிடிப்பு

1969 ஆம் ஆண்டு எரிக்கல் ஒன்று பூமியை நோக்கி வந்து ஆஸ்திரேலியாவில் விழுந்தது.இந்த எரிக்கல்லில் இருந்த துகள்களை அமெரிக்கா மற்றும் ஸ்விட்ஸ்ர்லாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு செய்தனர்.இந்த துகள்களை ஆய்வு செய்யும் பொழுது இவை 750 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என தெரியவந்துள்ளது.
நமது சூரிய குடும்பமே 460 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் உருவானது.ஆனால் இந்த துகள்கள் சூரிய குடும்பம் உருவாகுவதற்கு முன்பாகவே இருந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.இதன் மூலம் நட்சத்திரங்கள் எப்படி உருவாகின என்பதை பற்றிய ஆய்வுகளை இன்னும் தீவிரமாக முன்னெடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.