7 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் – சென்னை

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வானிலை மையம் கூற்றின்படி குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தின் தென் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது. மற்றும் தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மதுரை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. .