செண்பகவல்லி அம்மன் திருக்கோவிலின் 68 ஆம் ஆண்டு வருஷாபிஷேகம்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள செண்பகவல்லியம்மன் உடனுறை பூவனநாத சுவாமி திருக்கோவிலின் 68 ஆம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவினை முன்னிட்டு அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. மேலும் புனித நீர் மேளதாளம் முழங்க எடுத்து வரப்பட்டது. அதன் பின்னர் சுவாமி , அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகள் விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, சிறப்பு தீபாராதனை உடன், பக்தர்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு வருஷாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.இதனை தொடர்ந்து சுவாமி அம்பாள் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.