687 பேர் இந்தியர்களுடன் ஈரானில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்திற்கு ஐ.என்.எஸ் ஜலஸ்வா கடற்படை கப்பல் வருகை தந்துள்ளது.
ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் இந்திய கடற்படை கப்பல் ஐஎன்எஸ் ஜலஸ்வா மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு இன்று காலை அழைத்து வரப்பட்டனர். இதில், கேரளா-35, கன்னியாகுமரி.530, தூத்துக்குடி 33, நாகைப்டிணம் 27, திருநெல்வேலி 26, ராமநாதபுரம் 16, விழப்புரம் 8, கூடலூர் 8, அரியலூர் 1, காஞ்சிபுரம் 1, தஞ்சாவூர் 1, மயிலாடுதுறை 1 என மொத்தம் 687பேர் இன்று காலை தூத்துக்குடி வந்தடைந்தனர். அவர்களை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, துறைமுகசபை தலைவர் ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். தொடர்ந்து அவர்களுக்கு உரிய பரிசோதனைகள் நடத்தப்பட்டு, சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.