தூத்துக்குடி மாவட்டத்தில் 60 % கடைகள் திறப்பு

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த 3-வது கட்டமாக ஊரடங்கு வருகிற 17-ம் தேதி இரவு வரை சில தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளது. தமிழக அரசு கரோனா வைரஸ் பாதிப்பு குறைந்துள்ள பகுதிகளில் பல தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா நோய் தாக்குதல் அதிகம் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலம் என்றும், நோய் தொற்று குறைவான பகுதிகள் ஆரஞ்சு மண்டலம் என்றும், நோய் தொற்று அறவே இல்லாத பகுதிகள் பச்சை மண்டலம் என்றும் 3 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் ஆரஞ்சு மண்டலத்தில் உள்ளது. எனவே தூத்துக்குடியில் கட்டுப்பாடுகளை அரசு தளர்த்தியதால், சுமார் 60 சதவீத ஓட்டல்கள், தனி கடைகள் இன்று திறக்கப்படுள்ளன. அதன்படி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  • கட்டிட மற்றும் கட்டுமான பணிகளுக்கு தேவையான இரும்பு, சிமெண்ட், சானிட்டரிவேர், மின் சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அனுமதி.
  • தனித்து செயல்படும் செல்போன் ரீசார்ஜ், வீட்டு உபயோக பொருட்கள், எலக்ட்ரிக்கல், கடைகளுக்கு அனுமதி.
  • ஓட்டல்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். ஆனால் பார்சல் சேவைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தளர்வுகள் பொதுமக்களுக்கும், தனியாக இயங்கும் கடைகளுக்கும், அன்றாட தொழிலை நம்பியிருக்கும் மக்களுக்கும் மகிழ்ச்சி அளித்துள்ளது.