தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் பீஜியன் ரேசிங் கிளப் சார்பில் 5வது ஆண்டு புறா பந்தயம் நடத்தப்பட்டது.இந்த போட்டியானது விழுப்புரத்தில் இருந்து காயல்பட்டினம் வரை நடத்தப்பட்டது.இப்போட்டியில் பத்து உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் 42 புறாக்கள் கலந்து கொண்டன.இறுதியாக முகமது ரியாஸ் என்பவரின் புறா முதல் இடத்தையும்,இரண்டாவது இடத்தை பேயன்விளை புதூரை சேர்ந்த முத்துவின் புறாவும்,மூன்றாவது இடத்தை அழகாபுரி பவித்ரன் புறாவும் பிடித்தது. கிளப் தலைவர் முகமது ரியாஸ் மற்றும் நிர்வாகிகள் இப்போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
