மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 543 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பிலான கடன் உதவி: கயத்தாறு

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 543 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ வழங்கினார்.

கயத்தாறு மற்றும் நாலாட்டின்புத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் சார்பில் கோவைட் 19 கடன் வழங்கும் விழா மற்றும் நவீனமயமாக்கப்பட்ட புதிய கூட்டுறவு வங்கி கட்டிடம் திறப்பு விழா இன்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியல் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ கலந்துகொண்டு, கயத்தாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சங்கத்தின் சொந்த நிதியில ரூ.15 லட்சம் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடம் மற்றும் நாலாட்டின்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சங்கத்தின் சொந்த நிதியில் ரூ.20.28 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி வைத்தார். மொத்தம் 543 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளையும் வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தாவது:  இன்று கயத்தாறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சங்கத்தின் சொந்த நிதியில் இருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் நவீனமயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடம் திறந்து வைத்து தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 504 பயனாளிகளுக்கு ரூ.2.10 கோடி மதிப்பில் பல்வேறு கடன் உதவிகளை வழங்கப்பட்டது. மேலும்  நாலாட்டின்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் சங்கத்தின் சொந்த நிதியில் இருந்து ரூ.20.28 லட்சம் செலவில் நவீன மயமாக்கப்பட்ட அலுவலக கட்டிடத்தினை திறந்து வைத்து தூத்துக்குடி மத்திய கூட்டுறவு வங்கியின் சார்பில் 3 மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த 39 பேருக்கு ரூ.31 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 543 பயனாளிகளுக்கு ரூ.2.41 கோடி மதிப்பிவ் பல்வேறு கடன் உதவிகள் வழங்கப்பட்டது. இந்த கடன் உதவிகளை மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் முறையாக பயன்படுத்தி கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை உயர்தி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி தலைவர் சத்யா, மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் விஜயா, கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் ரவிசந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் ரமனிதேவி, முதன்மை வருவாய் அலுவலர் அருள்சேசு, பொது மேலாளர் வெற்றிவேல், கூட்டுறவு அச்சக தலைவர் அன்புராஜ்,மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.