மத்திய அரசின் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், “பாங்க் ஆப் இந்தியா” வங்கி சார்பில் 53 பனைத் தொழிலாளா்கள் குடும்பத்திற்கு கடனுதவி

மத்திய அரசின் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், “பாங்க் ஆப் இந்தியா” வங்கி சார்பில் 53 பனைத் தொழிலாளா்கள் குடும்பத்திற்கு கடனுதவி வழங்கப்பட்டது

தமிழ்நாடு பனைத் தொழிலாளா் சங்கம், கதா் வாாியத்துடன் இணைந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாின் பாிந்துரையின் படி காமநாயக்கன்பட்டி “பாங்க் ஆப் இந்தியா” வங்கி சார்பில் எட்டுநாயக்கன் பட்டியைச் சோ்ந்த 53 பனைத் தொழிலாளா்கள் குடும்பங்களுக்கு, மத்திய அரசின் கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ், கருப்பட்டி உற்பத்தி செய்து விற்பனை செய்து வரும் ஒரு குடும்பத்திற்கு ஒரு லட்சம் வீதம் 53 குடும்பங்களுக்கு பாங்க ஆப் இந்தியா மேலாளா் ஆல்பா்ட் அவர்கள் மானியத்துடன் கூடிய கடனுதவியை வழங்கினாா்கள்.

இன்று காலை எட்டுநாயக்கன்பட்டியில் பனைத் தொழிலாளியின் கருப்பட்டி தயாா் செய்யும் இடத்திற்கே நேரில் சென்று ஒரு பனைத் தொழிலாளா் குடும்பத்திற்கு பணம் பெறுவதற்கான சான்றிதழை வங்கி மேலாளா் ஆல்பட் அவா்கள் வழங்கினாா்கள். இந்நிகழ்வில் தமிழ்நாடு பனைத் தொழிலாளா் சங்க மாநில பொதுச்செயலாளா் ராயப்பன் அவர்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு பனைத்தொழிலாளா்கள் சங்க தலைவா் அாிபாகரன் உடனிருந்தனா்.