5117 வழக்குகள் பதிவு, 6020 பேர் கைது : காவல்துறை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 6020 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  2794 2794 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பலமுறை எச்சரித்தும் தடை உத்தரவை பொருட்படுத்தாமல் சாலைகளில் வாகனங்களில் அடிக்கடி சுற்றித்திரிவோரை போலீசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 50 நபர்களை போலீசார் கைது செய்து, 19 வாகனங்களை பறிமுதல் செய்தனர். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 5117 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6020 பேர் கைது செய்யப்பட்டுள்ளர். 2794 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.