மேலும் 5 பேருக்கு கரோனா தொற்று : தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது  கரோனா  சிறப்பு சிகிச்சை வார்டில் 9 பேர் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இன்று 46 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 5 ஐந்து பேருக்கு கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளனர். தற்போது மொத்தம் 14 பேர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள் எனவும், இதுவரை தூத்துக்குடி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 27 பேர் எனவும் உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி செய்திக்குறிப்பு வெளியிட்டார்.