ஒரே நாளில் 45 ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் அகற்றம் : தூத்துக்குடி

தூத்துக்குடி மாநகராட்சியில் போக்குவரத்துக்கு இடையூறான கட்டிடங்களை அகற்ற வலியுறுத்தி மாநகராட்சி அதிகாரிகள் வாரம்தோறும் முன்னெச்சரிக்கை நோட்டீஸ் அளித்து வருவதால் ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி விடுகின்றனர். ஆனாலும் அகற்றாத மீதமுள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றி வருகின்றனர்.

நேற்று தூத்துக்குடி குறிஞ்சிநகர் மற்றும் தனசேகரன் நகர் உள்ளிட்டபகுதிகளில் ஆக்கிரமிக்கபட்டிருந்த 45 ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து ஜேசிபி மூலம் அகற்றப்பட்டன. இதில் 15 டிஜிட்டல் பேனர்கள் மற்றும் 30 கட்டிட ஆக்கிரமிப்புகள் ஜேசிபி உதவியுடன் அகற்றப்பட்டன. இப்பணி மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டது.