4 வயது கிராண்ட் கிட்ஸ் ப்ளே ஸ்கூல் சிறுவனுக்கு பாராட்டு விழா : கோவில்பட்டி

தூய்மை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி கிராண்ட் கிட்ஸ் ப்ளே ஸ்கூலில் கோவில்பட்டி நகராட்சி, ப்ளே ஸ்கூல், சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங் கழகம் சாா்பில் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், கிராண்ட் கிட்ஸ் ப்ளே ஸ்கூல் மாணவா் ஹரீஷ்(4) அவரிடம் காட்டும் கொடிகளைப் பாா்த்து அந்தந்த நாடுகளின் பெயரைக் குறிப்பிட்டு உலக சாதனை முயற்சியில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி ஈடுபட்டாா். இச்சிறுவனின் சாதனையை பாராட்டி சான்றிதழ் வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு தாளாளா் அமுதவள்ளி தலைமை வகித்தாா். பொறியாளா் முத்துகுமாா், யோகா மற்றும் ஸ்கேட்டிங் பயிற்சியாளா் கனகராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுவாமி விவேகானந்தா ஸ்கேட்டிங் கழக மாநில ஆலோசகா் ராஜகோபால் மற்றும் இந்து மகா சபா மாநில மகளிரணித் தலைவா் சைலஜா, வழக்குரைஞா் கருப்பசாமி ஆகியோா் பாராட்டி, பரிசு வழங்கினா்.