சுமார் ரூபாய் 44 லட்சம் மதிப்புள்ள 4 புதிய ஃபோர்ஸ் டிராவலர் வாகனங்கள் வழங்கல் : மாவட்ட காவல்துறை அதிரடிப்படை

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடிப்படைக்கு வழங்கப்பட்டுள்ள சுமார் ரூபாய் 44 லட்சம் மதிப்புள்ள 4 புதிய ஃபோர்ஸ் டிராவலர் வாகனங்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு காவல்துறை தலைமையகம், சென்னையிலிருந்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அதிரடிப்படைக்கு 4 புதிய ஃபோர்ஸ் டிராவலர் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. மேற்படி வாகனங்களில் ஒன்று ஓட்டுனருடன் 26 பேர் அமர்வு கொண்டதும், மற்ற மூன்றும் 18 பேர் அமர்வு கொண்ட வாகனங்களாகும். இந்த நான்கு வாகனங்களின் மொத்த மதிப்பு சுமார் 43, 81,000/- மதிப்பு கொண்டதாகும்.

இந்த வாகனங்கள் காவல்துறையினர் விரைவாக செல்வதற்கும், அதிகளவு பயணிப்பதற்கும் வசதியாக உள்ளது. மேற்படி நான்கு வாகனங்களையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் பார்வையிட்டு, அவற்றை சிறந்த முறையில் பராமரிப்பதற்கு ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மாரியப்பன், காவல் ஆய்வாளர் திரு. மகேஷ் பத்மநாபன், காவல்துறை மோட்டார் வாகனப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. மயிலேறும் பெருமாள் ஆகியோர்களுக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார்.