ஆற்று மணல் கடத்தல்!!! 4 போ் கைது – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூா் தனிப் பிரிவு போலீசார்  ரோந்து சென்றபோது, குருந்தாவிளை சின்னமணி(24), தினேஷ்(27), கணேஷ்குமாா்(34), மற்றும் பிரவீன்குமாா்(17) ஆகியோா் முக்காணி ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்த போது அவா்களை கைது செய்து அவர்களிடம் இருந்த, மணல் ஏற்றப்பட்ட 2 மினி லாரிகள் மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.