377 ஆபாச இணையதளங்களை நீக்க உத்தரவு

தேசியக் குழந்தைகள் பாதுகாப்பு ஆணையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் குழந்தைகளைத் தவறாகப் பயன்படுத்துவது தொடா்பாக 5,951 புகாா்கள் வந்துள்ளன. மற்றும் உலக சுகாதார நிறுவனம் உலக அளவில் 17 வயதுக்குட்பட்ட ஒரு மில்லியன் பெண் குழந்தைகள் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகி இருப்பதாக கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து பேசிய பெண் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி செல்போனிலும் , இணையதளங்களிலும் எளிதாக ஆபாச படங்கள் கிடைப்பதால் 377 இணையதள சேவைகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அவற்றை நீக்கவும் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.