33வது சாலை பாதுகாப்பு படை ஆண்டு விழா : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் போக்குவரத்து காப்பாளர் அமைப்பின் (Traffic Wardens Organization) 33வது சாலை பாதுகாப்பு படை ஆண்டு விழாவில் சாலை பாதுகாப்பு பணியில் சிறப்பாக தொண்டாற்றிய பள்ளி, கல்லூரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் விருது வழங்கி பாராட்டினார்.

இந்த போக்குவரத்து காப்பாளர் அமைப்பின் 33வது சாலை பாதுகாப்பு படை ஆண்டு விழா இன்று (05.03.2020) தூத்துக்குடி பீச் ரோட்டில் உள்ள புனித மரியன்னை பெண்கள் கல்லூரியில் (St. Mary’s College for Women) நடைபெற்றது.

இந்த போக்குவரத்து காப்பாளர் அமைப்பானது தூத்துக்குடி மாவட்டத்தில் 1986ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளிலிருந்து 3446 தன்னார்வ மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்த 33வது சாலை பாதுகாப்பு படையின் ஆண்டு விழாவில் சென்ற ஆண்டு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்குதல், விழிப்புணர்வு பேரணி நடத்துதல் போன்றவற்றில் சிறப்பாக தொண்டாற்றிய பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், இ.கா.ப அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றி சிறப்புரையாற்றி, சிறப்பாக சாலை பாதுகாப்பு பணியை மேற்கொண்ட கல்லூரிகளுக்கு விருது வழங்கி பாராட்டினார்.

இவ்விழாவில் தூத்துக்குடி காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. குமார் மற்றும் தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் திரு. பிரகாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.