30 மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் : ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்

தூத்துக்குடியில் 30 மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மற்றும் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட அம்மா இருசக்கர வாகனம் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம், நல வாரிய திட்டம் (இயற்கை மரணம் ஈமச்சடங்கு), பாரா விளையாட்டு மாற்றுத்திறானிகள் வீரர்களுக்கு சக்கர நாற்காலி என 30 மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் மகளிர் திட்டத்தின் மூலம் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.மகளிர் திட்டத்தின் மூலம் அம்மா இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டு வருகிறது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம்10 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.56,400 மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களையும், தலா ரூ4,203மதிப்பிலான மோட்டாh, பொருந்திய தையல் இயந்திரம் 10 மாற்றுத்திறனாளிகளுக்கும், நல வாரியம் திட்டம் (இயற்கை மரணம் ஈமச்சடங்கு) உதவித்தொகை தலா ரூ 17000 ஆறு மாற்றுத்திறனாளிகளுக்கும், பாரா விளையாட்டு மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு சக்கர நற்காலி 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.29,060 என மொத்தம் 30 மாற்றுத்தினாளிகளுக்கு ரூ.8.24 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் மகளிர் திட்டத்தின் மூலம் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டத்தின் கீழ் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட அரசு மானியம் மற்றும் சமூக பொறுப்பு நிதியில் இலவமாக 25 மாற்றுத்திறனாளிகளுக்கு அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மகளிர் திட்ட திட்ட இயக்குநர். ரேவதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், உதவி மகளிர் திட்ட அலுவலர் பிரேமா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனார்