புதிய கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சீனாவில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீனாவில் உள்ள அரசு அதிகாரிகள் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். மேலும் இதில் பாதிக்கப்பட்ட நபர்கள் ஏதேனும் இருக்கிறார்களா என்பதை நல்ல பரிசோதனை மேற்கொண்ட பின்னரே அவர்களை வெளிநாட்டிற்கு பயணிக்க அனுமதி தர வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் (WHO) சீனாவிற்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அதில் குளிர் அல்லது காய்ச்சல் போன்ற அதிகாரிகள் கொண்ட விமான பயணிகள் யாரேனும் இருப்பின் அவர்களை தவிர்க்க வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.
மேலும் கடந்த இரண்டு நாட்களில் சீனாவின் வுஹான், பெய்ஜிங் மற்றும் ஷென்சென் ஆகிய பகுதிகளில் இந்த வைரஸ் தொற்று காரணமாக சுமார் 139 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சீன அரசாங்கம் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் சுவாச நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இடையே இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பதாக 2019-nCoV க்கான பரிசோதனையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதன் பாதிப்பு காரணமாக தற்போது மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
-seithikkural