டிராக்டர் மீது லாரி மோதியதில் 3 பேர் பலி, 8 பேர் படுகாயம் – எட்டயபுரம்

எட்டயபுரம் அருகே உள்ள மாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் விவசாய வேலைக்குச் சென்றுவிட்டு டிராக்டரில் எட்டயபுரம் தேசிய நெடுஞ்சாலையில் மின்சார வாரியம் அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு நிலக்கரி இறக்கி விட்டு தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, அந்த டிராக்டர் மீது மோதியதில் தலைகீழாகக் கவிழ்ந்து, அதன் பாகங்கள் சிதறின. இந்த விபத்தில் டிராக்டரில் இருந்த அந்தோணியம்மாள், கீதாராணி ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மற்றும் மரகதம்மாள் என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் 8 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து குறித்து எட்டயபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வெள்ளத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயமடைந்த 8 பேருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.