மாலத்தீவிலிருந்து 250 இந்தியர்கள் தூத்துக்குடி வ.உ.சி புதிய துறைமுகத்திற்கு வருகை

மாலத்தீவில் இருக்கும் இந்தியத் தொழிலாளர்களை இந்தியாவிற்கு அழைத்து வரும் விதவிதமாக 23.06.2020ம் தேதி காலை 9 மணிக்கு இந்திய கடற்படை கப்பல் INS AIRAVATH என்ற கப்பல் மூலம் மாலத்தீவிலிருந்து 250 இந்தியர்கள் தூத்துக்குடி வ.உ.சி புதிய துறைமுகத்திற்கு அழைத்து வர உள்ளனர். பின்பு தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் வைத்து 250 இந்திய தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்றுநோய் சம்பந்தமாக முதல்கட்ட மருத்துவ சோதனை முடித்து அரசு பேருந்துகள் மூலம் அந்தந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர் .