தூத்துக்குடி மாவட்டத்தில் 25 காவல் ஆய்வாளர்கள் பணியிட மாற்றம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றி வந்த 25 காவல் நிலையங்களில் உள்ள  காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து எஸ் பி ஜெயக்குமார் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார் 

அதன்படி விளாத்திகுளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ரமேஷ் புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கும், ஸ்ரீவைகுண்டம் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சுஜித் ஆனந்த் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்திற்கும், ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த முத்து கயத்தாறு காவல் நிலையத்திற்கும், வடபாக  குற்றப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்த ராமகிருஷ்ணன் ஶ்ரீவைகுண்டம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும், கயத்தாறு காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மணிவண்ணன் தூத்துக்குடி அமலாக்கப்பிரிவு ஆய்வாளராகவும்,  ACTU பெண் ஆய்வாளராக பணியாற்றி வந்த அல்பின் பிரைட் மேரி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், CCPS பெண் ஆய்வாளராக பணியாற்றி வந்த கண்ணாத்தாள் தூத்துக்குடி ACTU விற்கும்,  அதேபோல் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றி வந்த தங்கராஜ் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்திற்கும், ஆத்தூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சாகுல் ஹமீது திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் காவல் நிலையத்திற்கும், மாருதலாக கன்னியாகுமரி மாவட்டம் ஏர்வாடி சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த ஐயப்பன் ஆத்தூர் காவல் நிலையத்திற்கும், மாசார்பட்டி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த அனிதா சுத்தமல்லி குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும், சுத்தமல்லி குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த கோகிலா மாசார்பட்டி காவல் நிலையத்திற்கும், 
தூத்துக்குடி அமலாக்கப் பிரிவில் பணியாற்றி வந்த ரோஸ்லின் சவியோ தென்காசி மாவட்ட EOW – 2 விற்கும், ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த செந்தில்குமார் கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி காவல் நிலையத்திற்கும், கன்னியாகுமரி மாவட்டம் விகேபுரம் சர்கில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த சண்முகம் ஆறுமுகநேரி காவல் நிலையத்திற்கும், மத்தியபாக காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த வின்சென்ட் அன்பரசி கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை காவல் நிலையத்திற்கும், கன்னியாகுமரி மாவட்டம் கோட்டூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கிங்ஸ்டன் தேவானந்த் மத்தியபாகம் காவல் நிலையத்திற்கும், 
தெர்மல் நகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த சாந்தி திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், திருநெல்வேலி ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ராதிகா தெர்மல் நகர் காவல் நிலையத்திற்கும், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த மீரால் பானு திருநெல்வேலி மாவட்ட ACTU ஆய்வாளராகவும், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெர்னர்டு சேவியர் கன்னியாகுமரி மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கும், கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பாஸ்கரன் சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கும், 
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த ஜெயப்பிரகாஷ் வடபாகம் குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கும், கன்னியாகுமரி மாவட்டம் மணவளக்குறிச்சி சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த முத்துராமன் ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்திற்கும், திருநெல்வேலி மாவட்டம் எஸ் SCS2 ஆய்வாளராக பணியாற்றி வந்த சிவகுமார் தட்டார்மடம் காவல் நிலையத்திற்கும், கன்னியாகுமரி மாவட்டம் நேசமணி நகர் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த பத்மாவதி கோவில்பட்டி மேற்கு குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அமலாக்கப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்த சிவசங்கரன் தூத்துக்குடி CCPS ஆய்வாளராகவும், 
திருநெல்வேலி மாவட்டம் களக்காடு குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றி வந்த பழனிச்சாமி தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு ஆய்வாளராகவும், கன்னியாகுமரி மாவட்டம் ACTU ஆய்வாளராக பணியாற்றி வந்த வனிதா ராணி தூத்துக்குடி DCB ஆய்வாளராகவும், திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் குற்றப்பிரிவு பெண் ஆய்வாளராக பணியாற்றி வந்த கஸ்தூரி கழுகுமலை காவல் நிலையத்திற்கும், நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த வனிதா தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், பணியிட மாற்றம் செய்து எஸ்பி விஜயகுமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.