கொரோனா தொற்று நோயில் இருந்து 22 பேர் குணமடைந்தனர்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்தவா்களில் 22பேர் இன்று குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்ட்டனா். அவா்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பழங்கள் கொடுத்து வழியனுப்பி வைத்தார். மேலும் அரசு மருத்துவமனை முதல்வர் ரேவதி, உறைவிட மருத்துவ அலுவலா் சைலஸ் ஜெபமணி தலைமையிலான மருத்துவக் குழுவினா் அவர்கள் தொடா்ந்து 14 நாள்களுக்கு தங்களை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினா். மேலும் குணமடைந்த நோயாளிகள் தங்களை நல்லவிதமாக கவனித்ததாகவும், நல்ல சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், நல்ல உணவு வகைகள் கொடுக்கப்பட்டதாகவும் ஆட்சியரிடம் தெரிவித்தார்கள்