21 வருடங்கள் கழித்து தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவரின் மகளுக்கு அரசு வேலை

பேரிடர் மற்றும் தீவிரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவும், அரசுப்பணியும் தருவது அரசின் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 1997ம் ஆண்டு அல்உம்மா தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட காவலர் செல்வராஜ், அவரின் மகளுக்கு 22 வருடங்கள் கழித்து கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் இளநிலை உதவியாளர் வேலை வழங்கப்பட்டது. இவர் கொலை செய்யப்படும்போது 10 மாத கைக்குழந்தையாக இருந்தார். தனது தந்தையின் முகத்தை கூட பார்க்காமல் வளர்ந்த இந்த பெண், தந்தையின் மரணத்தால் தற்போது அரசு ஊழியர் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.