+ 2 மாணவன் தூக்கிட்டு தற்கொலை – தூத்துக்குடி

தூத்துக்குடி திரேஸ்புரம், சங்குகுளி காலனியைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வரும் மாணவன் போஸ் எட்வின் (17) இன்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இதுகுறித்து வடபாகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் எட்வின் தாயார் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், அவர் புன்னக்காயலில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இன்று காலை எட்வின் பள்ளிக்கு செல்லாமல் இருந்ததால், அவரது அண்ணன் ரமேஷ் கேட்டபோது “எனக்கு படிப்பு வரவில்லை, பொதுத்தேர்வில் பெயில் ஆகிவிடுவேன் என்று அஞ்சுவதாக கூறியுள்ளார். அதற்கு ரமேஷ் எட்வினுக்கு ஆறுதல் கூறிவிட்டு வேலைக்கு விட்டு கிளம்பியுள்ளார். மதியம் 2 மணிக்கு ரமேஷ் வீட்டிற்கு வந்தபோது,  போஸ் எட்வின் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணன் ரமேஷ் கதறியுள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.