தூத்துக்குடி மாவட்டத்தில் 27 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 26 பேர் சிகிச்சை பெற்று பூரண சுகம் பெற்று வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் தற்போது சுகாதாரத் துறையினர் ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று யாருக்காவது கரோனா உள்ளதா? என்பதை ஆய்வு செய்ததில் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும், மலவரயநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஆணுக்கும் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
