இந்தியர்களில் 2 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ள்து….

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே போகிறது. இதுவரை கொரோனா வைரஸ் 27 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்த சீன மற்றும் அமெரிக்க அரசுகள் தொடர் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் முதல் இன்று வரை சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றால் 1115 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஜப்பானின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள சொகுசு கப்பலில் இருந்த 138 இந்தியர்களில் 2 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த கப்பலில் உள்ள 3,700 பேரில் இதுவரை 174 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த கப்பலில் 6 தமிழர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடதக்கது