சட்டபூர்வ அனுமதியுடன் கஞ்சா வளர்ப்பதற்கு 2.15 லட்சம் ரூபாய் சம்பளம்

American Marijuana’ என்னும் கஞ்சா மருத்துவ ஆன்லைன் இதழ் ஒன்று கஞ்சா செடியின் மருத்துவ பயன்பாடு குறித்து ஆய்வு செய்து செய்தி வெளியிட்டு வருகிறது. அதில் இதற்காக கஞ்சாவை சுவைக்க ஆட்களை பணிக்கு வேலைக்கு அமர்த்த அந்த நிறுவனம் முடிவு செய்து விளம்பரம் செய்துள்ளது. ஆனால் ஒரு நிபந்தனை விதித்துள்ளனர். இந்த பணிக்கு சேர விரும்பும் நபர் தனக்கு சொந்தமான இடத்தில் கஞ்சா சட்டப்பூர்வ அனுமதியுடன் விளைவிக்க வேண்டும். ஒருவேளை உங்கள் நாட்டில் அதற்கான அனுமதி இல்லையென்றால் நீங்கள் அந்த வேலைக்கு சேர முடியாது. விண்ணப்பிப்பவர் 18 வயது பூர்த்தியானவர்களாக இருப்பது அவசியம். அத்துடன் நான் ஏன் இந்த வேலைக்கு தகுதியானவன் என்று ஒருநிமிட பேசி வீடியோவை அனுப்ப வேண்டும். தேர்வாகும் நபர்கள் வெவ்வேறு கஞ்சா ரகங்களை சுவைத்து அதுகுறித்து விமர்சனத்தைத் தெரிவிக்க வேண்டும். இதற்கு 2.15 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கிறார்கள். இதுவரை இந்த வேலைக்கு 3 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று ஆன்லைன் இதழின் முதன்மை ஆசிரியர் ட்வைட் ப்ளேக் கூறியுள்ளார்.