முதல் சுற்றின் முடிவுகள் – கிரிக்கெட் போட்டி

தூத்துக்குடி மாவட்டம் சமத்துவபுரத்தில் நேற்று Eleven Stars கிரிக்கெட் அணி நடத்தும் முதலாவது மாபெரும் கிரிக்கெட் போட்டியானது தொடங்கியது. பல்வேறு அணிகள் கலந்து கொண்டு தங்களின் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

நேற்றைய பொழுதில் கிரிக்கெட் போட்டியின் முதல் சுற்றானது தொடங்கியது. இச்சுற்றில் AW vs USA அணிகள் மோதின இதில் USA அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. HR vs MasterMinds போட்டியில் HR அணி வெற்றி பெற்றது.MSM vs Black Dragons அணிகள் மோதின இதில் MSM அணி 25 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.BD vs Royal அணிக்கும் போட்டியில் Royal அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டியின் போது சிறந்த வீரருக்கான மெடல் வழங்கி போட்டியின் உரிமையாளர்கள் பாராட்டினார்கள்.