ஒரு கிலோ வெங்காயம் ரூ.25

கடந்த சில மாதங்களுக்கு முன் வெங்காயம் உற்பத்தி அதிகம் நடைபெறும் பகுதிகளில் பெய்த எதிர்பாராத மழை காரணமாக பயிர்கள் சேதமடைந்ததால் உற்பத்தி பாதித்தது. இதனால் உள்நாட்டில் வெங்காயத்தின் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டு தற்போது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.100ஐ தாண்டி விட்டது. இதனால் நடுத்தரவாசிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் மட்டுமின்றி வெங்காயம் அதிகளவில் சாகுபடி செய்யப்படும் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களிலும் வெங்காய விலை அதிகமாகவே உள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்தில் கிலோ வெங்காயம் ரூ.95க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், அரசு சார்பில் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25க்கு விற்கப்படுகிறது. இதனை வாங்க மக்கள் அடித்துப்பிடித்துக்கொண்டு அலைமோதிய காட்சிகள் சமூக தளத்தில் வெளியாகியுள்ளன.