கொரோனா பாதிப்பிலிருந்து 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் இன்று கொரோனா பாதிப்பிலிருந்து 19 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று மொத்தம் 19 நோயாளிகள் நோய்த்தொற்று குணமாகி வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தற்போது (16/06/2020) இன்று மாலை 4 மணி நேர நிலவரப்படி மொத்தம் 125 நோயாளிகள் நோய்த்தொற்றின் காரணமாக உள்நோயாளியாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தூத்துக்குடியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மக்கள் யாரும் அச்சம் கொள்ள வேண்டாம் அரசு கூறும் அனைத்து கொரோனா தடுப்பு நடவடிக்கையை பின் பற்றுமாறு கேட்டுகொள்கிறோம். தனித்து இரு! விழித்து இரு! பாதுகாப்பாய் இரு!