ரூ.200-க்கு 18 வகையான காய்கறிகள் – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்டம் சார்பில் ரூ.200-க்கு வீட்டிற்கே காய்கறித் தொகுப்புப்பை விற்பனை துவக்கம்!

தமிழகத்திலேயே முதன்முறையாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில், தூத்துக்குடி மத்திய மாவட்டம் ஏற்பாட்டில் தூத்துக்குடி மாநகராட்சியின் அனுமதியுடன் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடமாடும் காய்கறி அங்காடி மூலம் ரூ.200-க்கு 20 வகையான காய்கறிகள் அடங்கிய தொகுப்புப் பை விற்பனை துவக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி ரங்கநாதபுரத்திலுள்ள சி.எம். மேல்நிலைப்பள்ளி அருகில் நடைபெற்ற துவக்க விழாவில், மாநகராட்சி ஆணையர் முனைவர்.வீ.ப.ஜெயசீலன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்ததார். பொது மக்கள் சமூக இடைவெளி விட்டு காய்கறித் தொகுப்பு பையை வாங்கிச் சென்றனர்.

இத்துவக்க விழாவில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தூத்துக்குடி மத்திய மாவட்ட தலைவர் சோலையப்பராஜா, துனைத்தலைவர் செல்லதுரை, பொருளாளர் ஆனந்த பொன்ராஜ், செயலாளர் மகேஷ்வரன், மாநில துனைத்தலைவர் வெற்றிராஜன், தொகுதி செயலாளர் ஆனந்தராஜ், செய்தித் தொடர்பாளர் செந்தில்முருகன் மற்றும் சட்ட ஆலோசகர் அருண்கார்த்திக் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கத்திரி, வரிகத்தரி, தக்காளி, சின்னவெங்காயம், பல்லாரி, உருளைக்கிழங்கு, தேங்காய், முட்டைகோஸ், பீட்ரூட், புடலை, பீன்ஸ், கேரட், வெண்டை, முருங்கை, மிளகாய், இஞ்சி, வாழைக்காய், கொத்தமல்லி, புதினா, கறிவேப்பிலை, எலுமிச்சை என 20 வகையான காய்கறிகள் அடங்கியுள்ளது.