இலவச மின் திட்டத்தை ரத்து செய்யும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு – முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ உட்பட 18பேர் கைது

இலவச மின் திட்டத்தை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சுடலையாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை காவல்துறை கைது செய்தது

விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும், கொரோனா ஊரங்கால் வறுமையில் வாடும் ஏழை விவசாயிகளுக்கு ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு அரசு வழங்கும் இலவச மின்சாரத்தை ரத்து செய்ய கூடாது என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் சுடலையாண்டி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஊரடங்கு காலத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சுடலையாண்டி உட்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர்.