கொரோனா பாதிப்பிலிருந்து 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டிலில் சிகிச்சை பெற்று வந்த 16 பேர் இன்று குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்கள்.

இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 16 நபர்கள் நோயிலிருந்து முற்றிலும் குணமாகி அவர்கள் தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். மேலும் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்றைய நிலவரப்படி தற்சமயம் 205 பேர் நோய்த்தொற்றின் காரணமாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.