விவேகானந்தரின் 157-வது பிறந்தநாள்:ராமகிருஷ்ணன மடத்துக்கு வருவது என்பது புனிதப் பயணம்-பிரதமர் மோடி

ஒரு மாநிலத்துக்கு சென்றால் ஆளுநர் மாளிகையில் பிரதமர் தங்குவது வழக்கம். ஆனால், பிரதமர் மோடி நேற்று இரவு முழுவதும் ராமகிருஷ்ண மடத்திலேயே தங்கியிருந்தார்.

விவேகானந்தரின் 157-வது பிறந்தநாளை முன்னிட்டு மேற்குவங்க மாநிலம் பெலூர் மாத்திலுள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார்.

விவகானந்தரின் பிறந்ததினமான ஜனவரி 12-ம் தேதி தேசிய இளைஞர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு மேற்குவங்கத்திலுள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு மோடி சென்றுள்ளார்.

ஒரு மாநிலத்துக்கு சென்றால் ஆளுநர் மாளிகையில் பிரதமர் தங்குவது வழக்கம். ஆனால், பிரதமர் மோடி நேற்று இரவு முழுவதும் ராமகிருஷ்ண மடத்திலேயே தங்கியிருந்தார்.

அந்த மடத்தில் பேசிய மோடி, ‘ராமகிருஷ்ணன மடத்துக்கு வருவது என்பது புனிதப் பயணம். என்னை இங்கு தங்குவதற்கு அனுமதித்த மடத்தின் தலைவருக்கும், மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நன்றி’ என்று தெரிவித்தார். மோடி பிரதமராக பதவியேற்றப் பிறகு ராமகிருஷ்ண மடத்துக்கு வருகை தருவது இது இரண்டாவது முறையாகும்.