கொரோனா பாதிப்பிலிருந்து 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டிலில் சிகிச்சை பெற்று வந்த 15 பேர் இன்று குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்கள்.

இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 15 நபர்கள் நோயிலிருந்து முற்றிலும் குணமாகி அவர்கள் தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். இவர்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ மற்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, உறைவிட மருத்துவர் சைலேஷ், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பழங்களை கொடுத்து வழியனுப்பி வைத்தனர்.மேலும் இவர்கள் 15 பேரும் 14 நாள்கள் அவரவர் வீடுகளில் தனிமையாக இருக்கும் படி அறிவுறுத்தபட்டனர்.