தமிழகத்தில் 144 தடை…

தமிழகத்தில் கரோனாவால் 9 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்து தமிழக முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். 144 தடை உத்தரவு நாளை மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வரும் என்றும் மார்ச் 31- ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அரசு தெரிவித்துள்ளது.