13 வகை காய்கறி பை ரூபாய் 150 க்கு – தூத்துக்குடி

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் டாக்டர். எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் ஆணையை ஏற்று, தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ ராஜு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர், எஸ்.பி சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோர் ஆலோசனையின்படி தூத்துக்குடி அம்மா பண்ணை பசுமை நுகர்வோர் கூட்டுறவு அங்காடி மூலமாக கீழ்க்காணும் 13 வகை காய்கறி மற்றும் கருவேப்பிலை, மல்லி இலை, புதினா இலை ஆகியவை கொண்ட காய்கறி பை ரூபாய் 150 க்கு நகரும் காய்கறி கடை மூலம் வினியோகம் செய்யும் பணி இன்று துவங்கியது. தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்,தூத்துக்குடி மாநகராட்சி, மற்றும் கூட்டுறவு துறை இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு தலைவர் இராசுதாகர் BSc.,MBA துவங்கி வைத்தார். உடன் தூத்துக்குடி மண்டல இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், தூத்துக்குடி சரக துணை பதிவாளர் திருமதி. சந்திரா மற்றும் பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடியில் மேலாண்மை இயக்குனர் சங்கர், மேலாளர் ராஜதுரை மற்றும் கூட்டுறவு துறை அலுவலர்கள் இருந்தனர். Mobile vegetable shop மூலம் மக்கள் வசிக்கும் தெருக்களுக்கே சென்று விநியோகம் செய்தனர்.