ஜூன் மாதத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு : அமைச்சர் செங்கோட்டையன்

இந்தியா முழுவதும் கொரோனா ஊரடங்கால் பள்ளி இறுதி ஆண்டு தேர்வுகள் நடத்தப்படாத சூழலில் 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவ மாணவிகளும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் ஊரடங்கு முடிவடைந்த பின்பு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நிலையில் தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் நடத்தப்படலாம் எனவும், இதனை உறுதி செய்யும் விதமாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ஜூன் மாதம் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.