கொரோனா பாதிப்பிலிருந்து 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்: தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டிலில் சிகிச்சை பெற்று வந்த 10 பேர் இன்று குணமடைந்து வீட்டிற்கு திரும்பினார்கள்.

இன்று தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 10 நபர்கள் நோயிலிருந்து முற்றிலும் குணமாகி அவர்கள் தங்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் கல்லூரி முதல்வர் டாக்டர் ரேவதி பாலன் மற்றும் மருத்துவத்துறை பேராசிரியர் இளங்கோ, உறைவிட மருத்துவர் டாக்டர் சைலஸ் ஜெயமணி ஆகியோர் முன்னிலையில் அவர்கள் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள் மேலும் குணமடைந்தவர்கள் 14 நாட்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கொண்டு வீட்டிலேயே இருக்க அறிவுறுத்த பட்டார்கள்.