வெள்ளத்தில் பீஹார் – கொண்டாட்டத்தில் மாணவி

பீஹாரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால், பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன 16 மாவட்டங்கள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் இரண்டு விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், பாட்னாவை சேர்ந்த பேஷன் டிசைனிங் படிக்கும் மாணவி அதிதி சிங் வெள்ளத்தில் எடுத்த புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், சராமரியாக விமர்சித்து வருகின்றனர்.
இந்த புகைப்படத்தை எடுத்த சவுரவ் அனுராஜ் என்பவர், ” பேரழிவில் தேவதை(Mermaid in Disaster)” என்ற தலைப்பில் வெளியிட்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், அதீதி சிங்கை சராமரியாக விமர்சிக்க துவங்கினர். சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்தனர்