விளைநிலங்கள் நாசம் விவசாயிகள் கண்ணீர் – ஊட்டி

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் துவக்கத்தில் நீலகிரியில் கொட்டித்தீர்த்த பெருமழை, கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராதது. இந்தப் பெரு மழையால் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் சேதமடைந்ததுடன் உயிரிழப்புகளும் ஏற்பட்டன. வீடுகளையும் விளைநிலங்களையும் இழந்த மக்கள் மெல்ல மீண்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு 11 மணி முதல் மீண்டும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குன்னூர், ஊட்டி, மஞ்சூர் ஆகிய பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் ஊட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல ஏக்கர் பரப்பிலான விளைநிலங்கள் மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்துவரும் நிலையில் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் என விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்