கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழகத்தில் சில அரசியல் காரணங்களால் மின்சார கட்டணம் உயர்த்தப்படாமல் உள்ளதால் அதிக மானியத்தை மின்சார வாரியம் தமிழக அரசிடம் எதிர்பார்க்க வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே விரைவில் மின் கட்டண உயர்வு குறித்த வரைவு பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும் மின்சார வாரியத்திற்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த வரைவு அறிக்கை வெளியானவுடன் மின் கட்டண உயர்வு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
