வங்கி பெயரைக் கொண்டு பண மோசடி – போலீசாரிடம் சிக்கிய கும்பல்

டெல்லியில் வங்கி வாடிக்கையாளர்களிடம் பேங்க் மேனேஜர் பேசுகிறேன் எனக் கூறி டெபிட் கார்ட் நம்பர் மற்றும் சி.சி.வி. நம்பர்களை பெற்று சில கும்பல் பண மோசடி செய்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு படிப்பறிவில்லாத ஒரு விவசாயிடம் அவரின் டெபிட் கார்டின் 16 எண்ணிகை எண்ணை வாங்க ஒரு வட மாநில நபர் படாத பாடு படும் உரையாடல் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியது. இது தொடர்பான கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். இனி இதே போல் வங்கிகளில் இருந்து வரும் கால்களில் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் படிப்பறிவில்லாதவர்கள் இதன் விளைவுகள் பற்றி விழப்புணர்வுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.