ரூ.7.62 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் – மதுரை

மதுரை ரயில் நிலையத்திற்கு குடிநீர் கொண்டு வந்த லாரியில் ஒரு பையில் ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்ட ஓட்டுநர் உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அங்கு வந்த காவல்துறையினர் அந்த பையில் இருந்த ரூ.7.62 லட்சம் மதிப்புள்ள 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை கொண்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.