கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த யாஹூ கூகுள் வருகைக்குப் பிறகு, தன் வசம் இருந்த பயனாளர்களை இழக்க தொடங்கியது. கூகுளை போன்று யாஹூ அனைத்து சேவைகளையும் வழங்கினாலும், யாஹூவால் கூகுளை மிஞ்ச முடியவில்லை. அதிக சேவைகள் வழங்காத காரணத்தினால், தன் வசம் இருந்த வாடிக்கையாளர்களை யாஹூ இழக்க தொடங்கியது. உலகம் முழுவதும் பிரபலமான இந்நிறுவனம் தனது சேவை மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டதால் தற்போது யாஹூ தளத்தில் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள், கோப்புகள்,என அனைத்து தரவுகளையும் வாடிக்கையாளர்கள் அனைவரும் வருகிற டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் சேமித்துக்கொள்ளும் படி அறிவுறுத்தியுள்ளது. அதன் பின் யாஹூ தனது சேவையை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. மேலும், இந்த முடிவு யாஹூ நிறுவனத்தின் கொள்கையின் அடிப்படையிலேயே எடுக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.
