மெட்ரோவின் புதிய அறிவிப்பு – சென்னை

கிண்டி, ஆலந்தூர் ஆகிய இரு மெட்ரோ ரயில் நிலையங்களில் முற்றிலும் மின்சாரத்தால் இயங்கும் சுமார் 20 VOGO நிறுவனத்தின் இருசக்கர வாகனங்கள் மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. அதனில் 20 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்துவிட்டு ஒருநாள் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் நாம் எடுத்து செல்லலாம். இறுதியில் 1 கிமீ பயணத்திற்கு 4 ரூபாய் என்ற விதத்தில் கட்டணம் வசூலிக்கப்படும். மற்றும் 10 மணி நேரத்திற்கும் மேல் பயன்படுத்தினால் 1 மணி நேரத்திற்கு 36 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த திட்டம் பலருக்கும் உபயோகமானதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.