சென்னை: வளிமண்டல மேலடுக்கில் ஏற்படும் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென்மாவட்டங்களில் பல இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மற்றும் குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் சூறைக்காற்று வீசுவதால் அடுத்த 2 நாட்களுக்கு குமாரி கடலுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
